
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் தற்போது தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன். அதேசமயம் திருமணமும் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு யாரையும் சார்ந்து வாழ்வதில் விருப்பம் கிடையாது. சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். நாம் தனியாகத்தான் பிறக்கிறோம். அதேபோன்று இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம்.
அப்படி இருக்கும்போது இடையில் இந்த உறவுகள் எதற்கு?. நான் இதுவரை 900 படங்களில் நடித்துள்ளேன். அதன் பிறகு 15 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகை. அவரைப் பார்த்து தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் விரட்டியதால் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் அதில் எந்தவித உண்மையும் கிடையாது. என் சகோதரிகள் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். எனக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. மேலும் வீட்டில் போர் அடித்தால் கோவிலுக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.