அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க நாட்டின் மெண்டானா பகுதியின் வான் பரப்பில் சீனாவின் உளவு பலூன் பறந்து கொண்டிருந்தது. இதனை அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் சுற்றி வீழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பலூனை அமெரிக்கா சுடுவதற்கு முன்பாக 60 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் பறந்து கொண்டிருக்கு போது அதனை கண்காணிக்க எப்-2-ரப்டர் போர் விமானத்தின் விமானி எடுத்த செல்ஃபி படத்தை அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் உள்ள சீன பலூனில் அமெரிக்க ராணுவ விமானத்தின் ஒரு பக்கம் நிழல் தெரிகிறது. அதோடு இந்த பலூன் அமெரிக்க கண்டத்திற்கு மேலே உள்ள வான் பகுதியில் அதிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது அந்நாட்டின் விமானப்படை வீரர்களால் செல்பி படம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.