
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளில் தன்னுடைய காதலியான கவுரி ஸ்ப்ராட்டை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். இரண்டு வருடங்களாக காதலித்து வரும் கவுரியை தன்னுடைய குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அமீர்கான். கவுரியை காதலித்து ஏன் என அமீர்கானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, “நான் அவர் அருகில் இருந்தால் எனக்கு அமைதி கிடைக்க வேண்டும் அப்படிப்பட்ட நபர் வேண்டும் என்று நினைத்தபோதுதான் கவுரி கிடைத்தார்.
எனக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டது. 60 வயதில் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது இருந்தாலும் பார்க்கலாம். தற்போது கவுரியை மீடியாவுக்கு தெரிந்து விட்டது. இதனை அடுத்து அவருக்கு மீடியாவை எதிர்கொள்ள பயிற்சி கொடுத்து வருகிறேன். அவருக்கு பாதுகாவலரையும் ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். அமீர்கானுக்கு முதல் இரண்டு திருமணங்கள் மூலமாக மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். கவுரிக்கும் ஆறு வயதில் மகன் இருக்கிறார். ஆனால் கவுரியை அமீர்கானின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.