செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஏற்கனவே உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில்  ஃபஸ்ட் பிரைஸ். இந்தியாவில் முதலிடம் வாங்குன  ஒரே மாநிலம் தமிழ்நாடு. ஆறு ஆண்டுகள் அண்ணன் அம்மா காலத்திலும்…. அண்ணன் எடப்பாடி காலத்திலும்.. நானே அந்த உடல் உறுப்பு தான விருதை நேரடியா வாங்கி இருக்கேன்.

இவங்க வந்த காலத்தில் இருந்து உடல் உறுப்பு தானத்தில் ஒன்றாம் இடத்திலிருந்து சறுக்கி, நான்காம் இடத்திற்கு சரிக்கி திமுக அரசு விட்டது. இதை நான் பலமுறை சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியின் விளைவாக..  தொடர்ந்து பலமுறை இதை குத்தி காட்டியதன் விளைவாக…  இன்றைக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். நிறைய தனியார் மருத்துவமனைகளில்  உடல் உறுப்பு தானம் பண்றாங்க,  அது பாராட்டுக்குரியது.

அதை நாம இன்னும் ஊக்குவிக்க வேண்டும்.  நாங்கள் ஏற்கனவே எங்களுடைய ஆட்சியில் ஒரு கருத்துருவை உருவாக்குனோம்.  ஆதரவற்ற விதவைக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு முன்னுரிமை இருக்கிறதோ அதுபோல உடல் உறுப்பு தானம் செய்யக்கூடிய குடும்பத்திற்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை இருக்கணும்.

அவுங்க அதுதான் கேக்குறாங்க. அவங்க உடல் உறுப்பு செஞ்சவங்க ஒரு  குடும்பத்துல போய் நீங்க அணுகி கேட்டா…  தங்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய பிறருக்கு  வேலை வாய்ப்பை எங்களுக்கு அரசாங்கம் உருவாக்கனும்.அந்த கருத்துருவை ஏற்கனவே அம்மாவுடைய ஆட்சியில் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.அந்த கருத்துருவை இந்த அரசு ஏற்றுக்கொண்டாலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த கருத்துருவை  ஏற்கவே எல்லாரும் பாராட்டுவாங்க என தெரிவித்தார்.