உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய மனைவி வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாக தற்போது இவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது பிச்சைக்காரர் ஒருவருடன் அவருடைய மனைவி ஓடிவிட்டார்.

தெருவில் பிச்சை எடுக்க வரும்போது அந்த பிச்சைக்காரருக்கும் தன் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் மாட்டை விற்று தான் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தீவிர தேடுதலுக்கு பிறகு அந்த பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.