மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, இந்த மண் மதுரை மண். ராசியான மண். மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது தொடங்கும். அப்படி ராசியான மாவட்டத்தில்…  இந்த மதுரை மண்ணில் முதன்முதலாக நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வீர வரலாற்று எழுச்சி மாநாடு இந்த மண்ணிலே தொடங்கி இருக்கிறோம்.

நம்மை ஆளாக்கிய பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக 30.6.2017 லே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது இந்த மதுரை மண்ணிலே தான். இந்த மதுரை மண்ணில் துவங்கப்பட்டது அனைத்தும் வெற்றி வெற்றி வெற்றி தான்.

தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலே பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை உங்களின் துணையோடு, மேடையில் வீற்றிருக்கிற தலைமை கழக நிர்வாகிகள்,  அப்போது அமைச்சர்களாக பலர் இருந்தார்கள் அவர்களின் துணியோடு 32 மாவட்டங்களிலும் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவரின் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திக் காட்டினோம்.

அந்த மாநாட்டிலே சுமார் 572 அறிவிப்புகள் வெளியிட்டோம். கிட்டத்தட்ட 3212 திட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு,  அதற்காக 5,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அதேபோல நம்மை எல்லாம் இந்த நிலைக்கு உயர்த்திய அனைத்ந்திய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக மெரினா கடற்கரையில் காமராசர் சாலையிலே பிரம்மாண்டமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா குறிக்கின்ற வகையிலே அங்கே அற்புதமான ஆற்றை ( ஆர்ச்சி)  உருவாக்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.