இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் C/2022 E3 (ZTF) என்ற வால் நட்சத்திரமானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிப்ரவரி மாத தொடக்கத்தில் பூமிக்கு மேலே உள்ள வானத்தில் இந்த வால் நட்சத்திரம் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வால் நட்சத்திரத்தை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.