
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள தி கோட் படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், அப்பளம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது கார்த்திக் சினிமா தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இப்படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. முன்னதாக இப்பட கொண்டாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கொடி மற்றும் சின்னத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும், கட்டவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் எனவும், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் கூறியிருந்த நிலையில் அமைதியான முறையில் அன்னதானம் வழங்கி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.