தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர் கிராமத்தில் முனுசாமி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை முனுசாமியின் குடும்பத்தினர் உட்பட 12 பேர் ஆந்திர மாநிலம் வி.கோட்டாவிற்கு காற்றாலை கயிறு திரிக்கும் கூலி வேலை செய்வதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை முத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் எர்ரஹள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டிராக்டரை முந்தி செல்ல முயன்றது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து டிராக்டரின் பின்புறம் பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் முனுசாமி, அதே பகுதியில் வசிக்கும் சதீஷின் மகள் 3 மாத குழந்தை வர்ஷினி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 7 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.