
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அங்கன்வாடியில் வேலை பார்த்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு 2 குழந்தைகளையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். அந்தப் பெண்ணுக்கு மனநிலை பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த சத்தீஸ்கர் மாவட்ட நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பெண்ணின் சார்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிவி நாகரத்னா, என் கோடீஸ்வரர் சிங் ஆகியோர் அந்த பெண்ணின் ஆயுள் தண்டனையை ரத்து செய்துள்ளனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது குற்றம் சாட்டப்பட்ட பெண் 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்துள்ளார். கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் குழந்தைகளை அடிக்கவில்லை.
இதை கொலையாக கருத வேண்டாம். குற்றம் சாட்டப்பட்ட பெண் மனநல ஆலோசரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை இல்லாத போது தாய் எப்படி இரண்டு குழந்தைகளையும் கொள்வார்? இந்த கொடூர செயலை எப்படி செய்ய முடியும்?
மனநல பிரச்சனை காரணமாகத்தான் அந்த பெண் எப்படி செய்துள்ளார். மனநலையை தற்காலிகமாக பாதிக்கும் செயலை ஸ்கிசோப்ரினியா எனக் கூறுகிறோம். இதற்கான அறிகுறியை கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது இல்லை. தற்போது பத்து ஆண்டுகள் அந்த பெண் சிறை தண்டனையை அனுபவித்து விட்டார். அவரை விடுதலை செய்கிறோம் என கூறியுள்ளனர்.