தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தனது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் யார் என விஜய் அவர்கள் மாநாட்டில் அறிவித்தார்.அதுவும் மறைமுகமாக இருப்பினும் யாரெல்லாம் அவர் விமர்சித்தாரோ அவர்களெல்லாம் தொடர்ச்சியாக விஜய் அவர்களின் பேச்சு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக தரப்பில் எச். ராஜா அவர்கள் விஜய் கொள்கையில் தெளிவில்லை என கூறினார். ஆளுநர் பதவி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என விஜய் கூறியது தேவையில்லாத ஒன்று என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். திமுக தரப்பில் யாவரும் முறையாக பதிலளிக்க விரும்பவில்லை. இன்று கூட விஜய் அவர்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர்கள் யாரும் முறையாக பதிலளிக்காமல் விலகிச் சென்றனர்.

சீமான் அவர்கள் விஜய் அவர்களது கொள்கையும் எனது கொள்கையும் ஒற்றுப் போகவில்லை என சாடி இருந்தார். அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவன் மாநாடு படப்பிடிப்பு போல் நடந்தது என விமர்சனம் செய்திருந்தார். விஜய் அவர்கள் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு மேல் பேச இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக அதை 48 நிமிடமாக அவர் சுருக்கிக் கொண்டார். வெறும் 48 நிமிடம் பேசிய பேச்சு இரண்டு நாட்கள் அதாவது 48 மணி நேரத்திற்கும் மேல் கடந்து விட்டது. இன்றளவும் அவரது பேச்சு தொடர்ச்சியாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது விஜய் அரசியல் தெளிவு இல்லை என கூறும் அதே அரசியல் கட்சிகள் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதைப் பற்றிய பேசி சில விஜய் சரியாக பேசியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.