தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் சசிகுமார். இவர் நடித்த பல வித்தியாசமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக நந்தன் என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் சசிகுமார் தற்போது சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதாவது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் பலரும் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து செல்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சசிகுமாரும் 48 நாட்கள் விரதம் இருந்து  இருமுடி கட்டி  பக்தர்களுடன் சேர்ந்து ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் அவருடன் சில ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.