
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக தயாரிக்கப்பட்ட முதல் தலைமுறை ஆப்பிள் ஐபோன் 190,372.80 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இந்த போனின் அசல் விற்பனை விலையை விட 400 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போய் உள்ளது. இந்த போன் LCG ஏலத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது. ஐபோன் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது சப்ளையர் ஆப்பிள் நிறுவனத்தில் பொறியியல் குழுவின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகப்படுத்தி இந்த வருடம் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐபோன் விரைவில் ஆப்பிளின் மிகப்பெரிய தயாரிப்பாக மாறியது. அது மட்டுமல்லாமல் இதே லைபோனை 2007 இன் சிறந்த கண்டுபிடிப்பு என்று பெயரிட்டது.