தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ப்ரியா மணி தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிரியா மணிக்கு திருமணமான நிலையில் குழந்தைகள் இல்லை. அவருக்கு தற்போது 40 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை பிரியாமணியின் முதல் சம்பளம் வெறும் 500 ரூபாய் தான்.

இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் தமிழில் கார்த்தியுடன் சேர்ந்து நடித்த பருத்திவீரன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் அவர் தேசிய விருது பெற்றுள்ளார். நடிகை பிரியாமணி ஒரு படத்தில் நடிக்க ரூ‌.2 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் தற்போது அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அவருடைய மொத்த சொத்து மதிப்பு 60 கோடி ரூபாய் ஆகும். மேலும் நடிகை பிரியாமணிக்கு பெங்களூரு மற்றும் சென்னையில் பிரமாண்ட வீடு இருக்கும் நிலையில் அவரிடம் பல சொகுசு கார்களும் இருப்பதாக கூறப்படுகிறது.