ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீனவர்கள் மீன் பிடிப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் மற்றும் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன் பிடித்து வந்ததாக  97 படகுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதில் மீன்பிடி அனுமதி சீட்டு வாங்காமல் 49 விசைப்படகுகள் மீன் பிடிக்க சென்றது தெரிய வந்தது. இதையடுத்து 97 படகுகள் மீதும் அபராதம் விதித்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த விசைப்படகுகளில் இருந்து 4 டன் மீன்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அதனை வியாபாரிகளிடம்  ரூ.32 ஆயிரத்துக்கு ஏலத்தில் விட்டனர்.