
சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேரிடர் கால கருவிகள், பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பேரிடர் மீட்பு மையங்களை அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது. தென்மேற்கு பருவ மழையின் போது திடீர் வெள்ளம் நிலச்சரிவை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக கன மழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.