
முன்னணி நடிகரான சைஃப் அலிகான் மும்பையில் இருக்கும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு மர்ம நவர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றார். அப்போது அங்கு வேலை பார்க்கும் பெண் அவரை தடுக்க முயன்றார். இதனால் கோபமடைந்த திருடன் அந்த பெண்ணை தாக்கிய நிலையில் அதனை தடுக்க வந்த சைஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
அவர் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சைஃப் அலிகானின் நான்கு வயது மகன் ஜஹாங்கீரை பணயமாக வைத்து மர்ம நபர் ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். அப்போது நடந்த சண்டையில் அவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்ததாக வீட்டில் வேலை பார்க்கும் எலியம்மா பிலிப் வாக்குமூலம் அளித்துள்ளார்.