பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் சென்ற 16ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் “ஆதிபுருஷ்”. இராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை பிரபல டைரக்டர் ஓம் ராவத் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மோசமான விமர்சனங்கள் ஒருபக்கம் இருப்பினும், முதல்நாள் மட்டும் ரூ.140 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில் இப்படம் வெளிவந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரையிலும் ரூ. 330 கோடி வரை மட்டுமே வசூல் செய்து உள்ளது. 3 நாட்களில் ரூபாய்.300 கோடி வசூல் செய்திருந்த இப்படம் 4-வது நாளில் வெறும் ரூ.30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அடி என்பது குறிப்பிடத்தக்கது.