கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு தெரியவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெயந்தியின் சடலத்தையும் நான்கு நாட்களாக சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்த பிரகதியையும் மீட்டனர். ஆனால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பிரகதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.