
மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பிராமண தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் கல்வி தான் முக்கியம் என்று ஒரு குழந்தையுடன் இளம் தலைமுறை நிறுத்தி விடுகிறது.
எதிர்காலத்தை காக்க வேண்டியது உங்கள் கடமை. கல்வி செலவு அதிகமாக இருக்கிறது என்று குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் இருந்து பின்வாங்காதீர்கள். இல்லையென்றால் மத வெறியர்கள் நாட்டை கைபற்றி விடுவார்கள்” என்று கூறியுள்ளார்.