
ஹிந்தி சினிமாவிலேயே மிகவும் காஸ்ட்லியான விவகாரத்து என்றால் அது ஹிருத்திக் ரோஷன் விவாகாரத்து தான் என்றும் எல்லாரும் கூறி வருகிறார்கள். பொதுவாக சினிமாத்துறையில் காதல், திருமணம், சில காலத்தில் விவாகரத்து பற்றி செய்திகள் தொடர்ந்து பேசு பொருளாகி கொண்டே தான் வருகிறது. ஜீவனாம்சம் பற்றிய விமர்சனமும் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஹிருத்திக் ரோஷன் விவகாரத்து குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இவருடன் 2000 வருடம் முதல் 11 வருடங்கள் வாழ்ந்த சூசன் விவகாரத்தின் போது 400 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கேட்டாராம். கடைசியில் 380 கோடி ஜீவனாம்சம் தர ஹிருத்திக் ரோஷன் ஒப்புக்கொண்டாராம். இதனை அடுத்து இந்தியாவிலேயே காஸ்ட்லியான விவகாரத்தை செய்த நடிகர் இவர் தான் என்று தற்போது நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.