
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் 38 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினியுடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சத்யராஜ் கொடுத்த பேட்டியின் போது அவரிடம் ரஜினியுடன் இத்தனை வருடங்களாக நடிக்கவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதோடு ரஜினிக்கும் உங்களுக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நான் படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு ரஜினி நடித்த 2 படங்களில் இருந்து எனக்கு தயாரிப்பாளர்கள் அழைப்பு விடுத்தனர். அதாவது சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் நடிப்பதற்கு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த கதாபாத்திரங்களில் எனக்கு திருப்தி இல்லாததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. மேலும் எங்கள் இருவருக்கும் இடையே பல வருடங்களாக எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.