மத்திய அரசானது நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வேலையில்லாதவர்களுக்காக பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (பிஎம்இஜிபி) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறு மற்றும் குடிசைத் தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவுவதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கிராமப்புறங்களுக்கு 35%, நகர்ப்புறங்களுக்கு 25% மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் இணைந்து பயன்பெற https://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.