
கோயம்புத்தூரில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவின் வாய்ஸ் எடப்பாடி பழனிச்சாமி என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தின் போது கொடுக்கப்பட்ட நிதி இரண்டு மடங்கு அதிகம். இதுவரை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ள நிதி பற்றி நிதி அமைச்சரிடம் கூறி முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா.? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போது ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பாஜக ஆட்சி காலத்தில் போது ஆகியவைகள் தொடர்பாக மேடை போட்டு விவாதிக்க பாஜக தயாராக இருக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 சதவீத வாக்குகளை திமுக இழந்த நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இழப்பார்கள். அதிமுகவிலிருந்து பல அமைச்சர்கள் முதல் அமைச்சருக்கு டப்பிங் செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது இருக்கும் 35 அமைச்சர்களில் 13 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான். எனவே எங்களுக்கு டப்பிங் தேவையில்லை. முதலமைச்சருக்கு அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் தான் டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் பாஜக கட்சிக்கு எந்த இடத்திலும் டப்பிங் தேவையில்லை என்று கூறினார்.