
நடிகை மாளவிகா மோகன்மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். விரைவில் பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் மூலமாக தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார் . மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயபூர்வம் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படப்பிடிப்பு புகைப்படங்களை மாளவிகா இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த படத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கும் மாளவிகா மோகனுக்கும் இடையே 33 வயது வித்தியாசம் இருப்பதால் பல ட்ரோல்கள் எழுந்தது.
இந்த நிலையில் இந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை மாளவிகா மோகனன், “30 வயது நடிகைக்கு ஜோடியாக 65 வயது நடிகர் நடிக்கிறார். இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதிற்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதற்கு என்ன காரணம் என்ற ரசிகர்களின் கேள்விக்கு மாளவிகா பதிலளித்திருக்கிறா.ர் அவர் வெளியிட்ட பதிவில் அப்படி உங்களுக்கு யார் சொன்னது? அரைகுறையாக தெரிந்து கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு நபரையோ படத்தையோ மதிப்பிடுவது நிறுத்துங்கள்” என்றும் கூறியுள்ளார்.