மேற்குவங்கம் மாநிலத்தில், கொல்கத்தா அருகிலுள்ள கூச் பெகர் பகுதியில், நெஞ்சை பதறவைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. அக்டோபர் 11-ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையில்  இளைஞர்கள் குழு இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணித்தபோது, மோசமான விபத்து ஏற்பட்டது.  சாலையின் வலப்புறம் கடக்க முயன்ற பொலிரோ கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

இந்த பயங்கர விபத்தில், காரில் இருந்த இருவர் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.