தமிழக அரசானது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.   இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து 40% மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த பழங்குடியின மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் நர்சிங் படிப்பில் சேர்வதற்கு அரசு உதவி செய்ய இருக்கிறது.

மூன்றாம் ஆண்டு நர்சிங் படிப்பிற்கு கல்வி கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம் மற்றும் இதர  கட்டணங்களையும் சேர்த்து ஒரு மாணவிக்கு 70 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்த செலவையும் அரசே ஏற்கும். இந்த திட்டத்தின் மூலமாக பழங்குடியின மாணவிகள் பயனடைவார்கள். மேலும் மாணவிகள் திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் அலுவலகத்தில் சென்று பதிவு செய்து பயனடைந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.