அமெரிக்காவில் பாலியல் படங்களில் நடித்து வந்த நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் நான்காவது நபராக தற்போது நடிகை சோபியா லியோ மரணம் அடைந்துள்ளார். முன்னதாக காக்னி லின் தைனா ஃபீல்ட்ஸ் (24), லின் கார்ட்டர்(36), ஜெஸ்ஸி ஜேன்(43) ஆகிய நடிகைகள் இந்த ஆண்டில் மரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்த சிலர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.