ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் முரளி என்ற ஓட்டுநர் தீராத வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் வயிற்றில் 5 inch தையல் ஊசி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதாவது கடந்த 3 மாதங்களாக அவர் வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்த நிலையில் அவருக்கு ஏதோ வயிற்றில் சிக்குகிற மாதிரி தோன்றியுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் 5 inch  ஊசி இருப்பது தெரிய வந்ததால் அவருக்கு ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்தனர். அந்த ஆப்ரேஷனில் அவர் வயிற்றில் இருந்த தையல் ஊசி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மேலும் இந்த ஊசி எப்படி வயிற்றுக்குள்  போனது என்ற கேள்விக்கு முரளி பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.