ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட ஆசை இருக்கிறது என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்..

2023 பார்டர்-கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது.. இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி (பிப்ரவரி 09 ஆம் தேதி) நாளை நாக்பூரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் போட்டி குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் போட்டி குறித்து இரு அணி வீரர்களும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் லெவனை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று இந்திய துணை கேப்டன் கே.எல்.ராகுல் கூறினார். “3சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட ஒரு ஆசை இருக்கும்.. ஆனால் ஆட்டத்தின் நாளில் ஆடுகளத்தை நாங்கள் அறிவோம்,” என்று  கூறினார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பல இடது கை பேட்டர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் “சவால்” அளிக்கும் விதமாக பந்து வீசுவார்கள் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஎஸ் பாரத் (வி.கே.), இஷான் கிஷான் (வி.கே.), ஆர். அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.