நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தக்காளி ஒரு கிலோ ரூ.100, 150, 200-க்கும் மேல் விற்பனையானது  இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாக்கினார்கள். மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்பனை செய்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக தக்காளி விலை மீண்டும் குறைந்து பொதுமக்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

பல்வேறு முக்கிய சந்தைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.30, 40, 60 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை குறைந்து நான்கு சக்கர வாகனத்தில் வைத்து மூன்று கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். குறிப்பிடத்தக்கது.