
கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன்(55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினேகம் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திவரும் சுனில் தாஸ்(63) என்பவர் அறிமுகமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுனில் தாஸ் கமலேஷ்வரனை தொடர்புகொண்டு தனது சேரிட்டபிள் டிரஸ்ட்க்கு ரிசர்வ் வங்கியில் இருந்து 3.17 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வந்துள்ளது. 3 கோடி ரூபாய் கடன் கொடுத்தால் அதனை வாங்கி பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் ரிசர்வ் வங்கியில் இருந்து வந்ததாக போலியாக தயாரித்த ஒரு கடிதத்தையும் சுனில் தாஸ் கமலேஷ்வரனிடம் காண்பித்துள்ளார். இதனை உண்மை என நினைத்த கமலேஷ்வரன் ஒரு கோடி 56 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி மூலமும், ஒரு கோடியே 43 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை ரொக்கமாகவும் சுனில் தாஸிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் சுனில் தாஸ் அந்த பணத்தை திரும்ப தரவில்லை. இதனால் தன்னை மாற்றப்பட்டதை அறிந்த கமலேஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மதுரையில் பதுங்கி இருந்த சுனில் தாசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்