உலக சுகாதார நிறுவனம்  உலகளாவிய கொரோனா பொது சுகாதார அவசர நிலையை (PHEIC) நீக்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், “கொரோனாவானது சுகாதார நெருக்கடியை தாண்டி, பொருளாதாரம், தொழில்களை முடக்கி லட்சக்கணக்கான மக்களை வறுமையில் மூழ்கடித்துவிட்டது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

எனவே மிகுந்த நம்பிக்கையுடன் உலகளாவிய கொரோனா சுகாதார அவசர நிலை பிரகடனம் முடிந்துவிட்டது என அறிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 2020 ஜனவரி 30ஆம் தேதி சுகாதார அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து அவசர நிலை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.