நடிகை ஹன்சிகா தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆம்பள, வாலு உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளா.ர் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தொலைக்காட்சி நடிகை முஸ்கன் நான்சி என்பவரை கடந்த 2020 ஆம் வருடம் திருமணம் செய்தார். சில காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவருடைய அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்திருந்தா.ர் இந்த நிலையில் ஹன்சிகாவும் முஸ்கன்  மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எனது சகோதரரின் மனைவி என் மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துகிறார். என் பிரஷாந்த்- முஸ்கன் திருமணத்திற்கு 27 லட்சம் கடன் வாங்கி நான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கான் இடம் திருப்பி கேட்டதற்காக தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.