துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து கடந்துள்ளது. எங்கு திரும்பினாலும் மரண ஓலங்களும் பிண துர்நாற்றமும் வீச தொடங்கியுள்ளது. இதனால் அந்நாடுகள் முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த நிலையில் கஹ்ரமன்மராஸ் பகுதியில் அலினா என்ற 17 வயது சிறுமியை 248 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் உயிருடன் மீதுள்ளனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளியான அக்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடுபாடுகளிலில் யாரேனும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே இங்கு வந்தோம். இதன் மூலம் ஒருவரை உயிருடன் மீட்க முடிந்ததால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.