நேற்று நேற்று நடந்த ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. ரகுவன்ஷி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவருமே அதிரடியாக அரை சதம் விளாசி அணிக்கு வலு சேர்த்தார்கள். இதற்கிடையில் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டதால் ஏற்படும் அழுத்தம் குறித்து வெங்கடேஷ் ஐயர் பேசியுள்ளார். அதாவது, நவம்பர் மாதம் நடந்த ஏலத்தில் வெங்கடேஸ் ஐயர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23.5 கோடி வரை ஏலம் கேட்டபோதிலும் விட்டுக் கொடுக்காமல் கொல்கத்தா அணி 23.75 கோடிக்கு மீண்டும் வாங்கியது.
பெரிய தொகைக்கு செல்லும் வீரர் மேல் எப்போதுமே ஒரு அழுத்தம் இருக்கும் .இந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில் மூன்று போட்டிகளை தவிர நேற்று நடந்த போட்டியில் தன்னுடைய முழு திறமையும் வெளிக்காட்டி 29 பந்துகளில் 7 பவுண்டர்களில் மூன்று சிக்ஸ் உட்பட 60 ரன்கள் விளாசி அணியை 200/6 என்ற இலக்குக்கு அழைத்து சென்றார். பின்பு போட்டிக்கு பின் பேசிய அவர், “ஐபிஎல்லில் 20 லட்சம், 20 கோடியோ விலை முக்கியம் அல்ல. பணம் ஒருபோதும் ஆட்டத்தை தீர்மானிக்காது. அதிக வேலைக்கு கொடுத்து வாங்கப்பட்ட வீரர்களிடம் எதிர்பார்ப்புக,ள் அழுத்தம் இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்காக அதிக தொகையை பெறும் நான் எல்லா போட்டிகளிலுமே ரன்களை குவிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
