கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற மே 24ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படம் எடுக்கப்பட்டது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் பான் இந்தியா தரத்திற்கு உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் அனிருத் இசை அமைத்துள்ளார்.