
விவசாயிகள் விளைவிக்கும் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்க இந்திய அரசு கொள்கைகளை வகுத்துள்ளது. இந்தக் கொள்கைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் (MSP) மற்றும் நியாயமான மற்றும் லாபகரமான விலை (FRP) என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு அரசு நிறுவனங்களின் கருத்துக்கள் மற்றும் பிற முக்கிய காரணிகளை கருத்தில் கொண்டு 22 பயிர்களுக்கான விலையை அரசு தீர்மானிக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் 22 வேளாண் விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் இணை அமைச்சர் பிரதிமா மொண்டல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில அரசுகளுடனும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் துறைகளுடனும் ஆலோசனை நடத்தியதாக கூறிய அவர், தேவை- விநியோக நிலவரம் உள்ளிட்ட பல அம்சங்களை கவனத்தில் கொண்டு உற்பத்தி செலவு விட 50 சதவீதம் கூடுதலாக MSP விலையை நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.