தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்தத் திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை அள்ளிக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அஜித்தின் அடுத்த ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தில் அஜித் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த பிறகு கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.