விவாகரத்து வழக்குகளுக்கு ஆன்லைன் மூலமாக விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படும் பழக்கமானது சில நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த திரு மற்றும் திருமதி வில்லியம்ஸ் என்று  அழைக்கப்படும் இந்த தம்பதிகள் 21 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு நிதி தொடர்பான விவகாரங்கள் கருதி இந்த வழக்கு இழுபறியிலிருந்து வந்த நிலையில் அதே சமயத்தில் வேறொரு தம்பதியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த தம்பதிகளின் விவாகரத்துக்காக ஆன்லைன் போரட்டலில்  விண்ணப்பிக்க வேண்டி இருந்தது.

இந்த சூழலில் வழக்கறிஞர் இந்த தம்பதிக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன்லைனில் வில்லியம்ஸ் தம்பதியின் கணக்கை கிளிக் செய்ததால் அது நீதிமன்ற விசாரணைக்கு சென்று விட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் 21 நிமிடங்களில் தவறுதலாக விவாகரத்து உத்தரவை வழங்கி விட்டது .

இந்நிலையில்இந்த சம்பவம் குறித்து பேசிய குடும்ப நல பிரிவு நீதிபதி வழக்கறிஞர்கள் விவகாரத்துக்கு விண்ணப்பம் வேண்டிய வழக்கு கோப்பை திறப்பதற்கு பதிலாக வில்லியம்ஸ்  தம்பதியின் கோப்பை திறந்து அதில் தவறான உத்தரவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் தவறாக பொத்தானை அழுத்தியதால் வேறு வழக்குக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.