தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கிய ராமதாஸ் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் தைலாபுரம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அன்புமணி ராமதாஸ் உடனான பிரச்சனை சரி செய்யப்படும்.

சரி செய்தால் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். சென்னைக்கு வந்த 2 நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று அமித்ஷா சரியாகத்தான் கூறியிருக்கிறார். எந்த கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது. கூட்டணி குறித்து நேரம் வரும்போது சொல்லுகிறேன் என்று கூறினார்.