2025 மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் சற்று முன் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தில் 91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம் 120 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ள நிலையில் 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெறுகிறது.

ஏலத்திற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2.5 கோடி ரூபாய், குஜராத் அணி 4.4 கோடி ரூபாய், மும்பை இந்தியன்ஸ் அணி 2.65 கோடி ரூபாய், உ.பி வாரியர்ஸ் அணி 3.9 கோடி ரூபாய், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3.25 கோடி ரூபாய் இருப்பு வைத்துள்ளது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகளின் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.