
கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளது. இந்த விளையாட்டானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் செல்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர் நீண்ட காலம் விளையாட தன்னை நிலை நிறுத்திக் கொண்டால் அதில் பல வகையான நன்மைகள் அவருக்கு கிடைக்கும். இந்த நிலையில் உலகில் பணக்கார கிரிக்கட் வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்த வீரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பணக்கார வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். கிரிக்கெட்டில் பெற்ற ஊதியம், விளம்பரம், பிசினஸ் உள்ளிட்டவை மூலமாக இவரின் மொத்த சொத்து மதிப்பு 120 மில்லியன் டாலர்களாக உள்ளது. இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 125 மில்லியன் அதாவது 1083 கோடி. இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் விராட் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 797 கோடி. நான்காவது இடத்தில ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 70 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) 60 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். ஆறாவது ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா) – 50 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடனும், ஏழாவது இடத்தில் ஜேக்கியூஸ் கல்லிஸ் (தென் ஆப்பிரிக்கா) – 48 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடனும், எட்டாவது இடத்தில விரேந்தர் சேவாக் (இந்தியா) – 40 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடனும், ஒன்பதாவது இடத்தில ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) – 35 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடனும், பத்தாவது இடத்தில யுவ்ராஜ் சிங் (இந்தியா) – 35 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடனும் உள்ளார்.