சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் கொடி சர்ச்சை: உண்மை என்ன?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் கட்சிக் கொடி, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியுடன் ஒத்துப்போவதாக கூறி, இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, அரசியல் சார்ந்த திரைப்படங்களில் கட்சிக் கொடிகள் பயன்படுத்தப்படும் போது, அவை எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் குறிப்பிடாத வண்ணம் வடிவமைக்கப்படுவது வழக்கம். ஆனால், ‘மாவீரன்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் கொடி, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கொடியுடன் ஒத்துப்போவதாக கூறி படத்தில் கொடி இடம் பெற்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. மாவீரன் திரைப்படம் 2023ல் வெளியானது. அதே போல் கட்சி கொடியின் நிறம் மட்டும் தான் ஒன்றே தவிர அதில் உள்ள சின்னங்கள் மாறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Post by @error404tamilofficial
View on Threads