மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. அதேபோல், ஆண்டுக்கு 5 -7.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கான வரியும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.