சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று நாட்டையே புரட்டி போட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில் பொது முடக்கங்கள் ஏற்பட்டு மக்கள் அனைவரும் சொல்ல முடியா துயரத்திற்கு ஆளாகினர். தற்போது தடுப்பூசிகள் போடப்படுவதால் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த உருமாறிய வைரஸ் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில்  நேற்று ஒரு நாளில் மட்டும் 89 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,035  பேர்  சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.