
லண்டனில் நடைபெற்ற அமெரிக்க பாடகர் உஷரின் கச்சேரியின் போது ஒரு பெண், உஷருடன் “நடந்து கொண்ட விதம் ” சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் தவறுதலாக உஷருக்கு முத்தமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணின் கணவர் — 45 வயதுடைய நபர் — இதைத் தொடர்ந்து விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளதாக அந்த வீடியோவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை.
🚨A 45 year old man has filed for Divorce after his wife had this moment with usher Raymond . According him , the woman has never kissed him in public and he is shocked that she could do that to a complete stranger in the presence of 20k people.
— Dr Penking™🇳🇬🇦🇺 (@drpenking) April 4, 2025
வீடியோவில் மேலும் கூறப்படுவதாவது, “என் மனைவி ஒருபோதும் எனக்கு பொது இடத்தில் முத்தமிட்டதில்லை, ஆனால் 20,000 பேர் முன்னிலையில் ஒரு அறிமுகமில்லாத ஆணை முத்தமிட்டது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என கணவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், மேடையில் அந்தப் பெண்ணும் உஷரும் காட்டிய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உண்மை நிலைமை குறித்து தெளிவான தகவல்கள் இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில் இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.