அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 51 ஆவது லீப் போட்டி நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அகமதாபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் தனி 20 ஓவர்களில் 224 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

அதோடு புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதற்கிடையில் அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை மீண்டும் குஜராத் வீரரான சாய் சுதர்சன் பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் 48 ரன்கள் எடுத்த சாய் சுதர்சனின் ரன் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

அவர் மும்பை வீரர் சூரியகுமார் யாதவிடமிருந்து ஆரஞ்சு தொப்பியை தட்டி பறித்துக் கொண்டார். இந்நிலையில் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் நேற்று முன்தினம் 54 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்தார்.  இந்திய வீரர்களில் இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸில் 2000 ரகளை கடந்ததே அதிகமாக இருந்தது. அதனை தற்போது சாய் சுதர்சன் முறியடித்துள்ளார்.