ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சன்ரைசர்ஸ்- ஹைதராபாத் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 59 ரன்கள் அடித்தார். இந்நிலையில் அந்த ஆட்டத்தின் போது லக்னோ வீரர் திக்வேஷ் ரதி, அபிஷேக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்திய உடன் அதிரடியாக அதனை கொண்டாடினார்.

இதனால் கோபமடைந்த அபிஷேக் ஷர்மா, திக்வேஷ் ரதியுடன் மைதானத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் ஷர்மா இதுகுறித்து கூறியதாவது,” விளையாட்டு முடிந்த பிறகு திக்வேஷிடம் பேசினேன். நாங்கள் முதலில் பேட்டிங் எடுத்திருந்தால் வேறு திட்டம் வைத்திருந்தேன்.

இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. இருப்பினும் இவ்வளவு பெரிய ஸ்கோரை துரத்துவது என்பது ஒரு தெளிவான திட்டத்தினால் மட்டுமே முடியும். 200க்கும் மேற்பட்ட ரன்களை சேசிங் செய்யும்போது திறமையாக விளையாட வேண்டும். அதுகுறித்து எந்த விரரிடம் நீங்கள் கேட்டாலும், பவர்பிளேயை  பயன்படுத்த வேண்டும் என கூறுவார்கள்.

நான் நன்றாக செயல்பட்டால் எங்களது அணியும் நன்றாக செயல்படும் என்பது எனக்குத் தெரியும். நான் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த விரும்பினேன். இதுவே நான் சர்வதேச கிரிக்கெட்டிலும் வைத்திருந்த திட்டம். அதாவது முதல் பந்தில் இருந்தே அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்க வேண்டும்”என கூறினார்.