
அமெரிக்காவில் 20 பெண்களை திருமணம் செய்த குற்றத்திற்காக மத போதகர் ஒருவருக்கு 50 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது FLDS என்ற ஒரு சிறிய குழுவின் தலைவராக சாமுவேல் பேட்மேன் என்பவர் இருந்துள்ளார். இவருக்கு 46 வயது ஆகும் நிலையில் ஒரு மத போதகர். இவர் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 20 பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களில் 11 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும் அடங்குவார்கள். அத்தனை மனைவிகளையும் தனக்கு சொந்தம் கொண்டாடினார். இவர் பாலியல் ரீதியான புகாரில் சிக்கிய நிலையில் குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இவரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மேலும் ஏற்கனவே விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அவர்தான் குற்றவாளி என்பது உறுதியானதால் தற்போது 50 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.